செயின் தம்பி ஸியாம் - கவிதைகள்


இரவு தின்னாத பசி
.........................................
.........................................

ஒவ்வொரு விரலாக
கடித்துக்கொண்டிருந்த வாய்
பிடிப்பில்லாமல்
உதட்டை சப்பிக்கொண்டிருந்தது

வயிறு வீணை வாசிக்க வாசிக்க
வம்பினால்
நீரை உகுத்திய கண்கள்
தாலாட்டும் பாடியது

சின்னமகள் சிணுங்கியபோது
பேயாய் திரும்பிய தாய்
சுவாசத்தை சிறைப்பிடிக்க
திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள்

கொடுகிய
கேழிக்குஞ்சாய் பல பாம்புகள்
வயிற்றுக்குள்
கொத்திக்கொண்டே இருந்தது.
..................................................................

செயின் தம்பி ஸியாம் - கல்முனை







ஒன்றாகிக் கலத்தல்
..............................................

அர்த்த ராத்திரியில்
கட்டவிழ்த்துவிடப்பட்ட
ஒன்றைப்பற்றித்தான்
அந்நிலவு -
நீண்டநேரமாகப்பேசியது.

ஆடை களைந்த வானம்
பூமியை சிறைப்பிடித்து
சாகும்வரைக்கும்
போராட்டம் நடத்தியது

இடைவழியில்
கருக்கொண்டமேகம்
நிலவினை
போர்வையிட்டு - கண்ணீரால்
தாலாட்டுப்பாடியது

பூமியின் பிடியறுந்த வானம்
தவறையெண்ணி
உடல் சிவந்து வெடிக்க
பூமியும் மேகமும் - ஊடல்மாறி
ஒன்றாகிக்கலந்தது
............................................
செயின் தம்பி ஸியாம் - கல்முனை
 
 
 
 
வீணையின் சுவாச வலி
................................................

தினமும் வாசிக்கப்படுகிறது
என் வரலாறுகள்
உன் வீட்டுத் திண்ணையில்
படிக்கம் வட்டாவுடன்
பாய்விரிக்கும் பெண்களால்..

கண் வைத்துப் பொசுக்கி
கால் வைத்து முறித்து
தலையறுந்த முண்டமாயும்
மூச்சுப் பேச்சற்று
நிர்வாணமாய்க் கிடக்கிறது

பெட்டி இழைத்துப் பொத்தி
சாயமும் பூசி
கள்ளோலை விட்ட கணக்காய்
வாய்விட்ட கணக்கு
திண்ணைக்கு விருந்தாகிறது
என்றைக்கும்

ஒன்று மடடும் உண்மை
மாற்றான் திண்னையில்
என் வறலாறுகள்
காவியம் படைத்ததுபோல்
உன்மகளும் வாசிக்கப்படுவாள்
கறுப்பழகி என்றாவது
----------------------------------------------------
 
செயின் தம்பி ஸியாம் - கல்முனை
 
 

No comments:

Post a Comment