சிறுபான்மையை இம்சிக்கும் பெரும்பான்மையின் அடக்குமுறைக்கு எதிராய் பேனா ஏந்திய ஒரு அகிம்சாவாதியின் அலறல்கள்
Thursday, 31 July 2014
Monday, 21 July 2014
குறிப்பு வரைதல்

இப்பொழுதெல்லாம்
மனிதன் என்னும் பெயருக்கு
சிறு குறிப்பொன்றை வரைந்தால் ...
அது .
எலும்புகளை மூட
தசையையும்
தசையை மூட
ஆடைகளையும் போர்த்திக்கொள்ளும்
விசஜந்து என்றே பொருள்ப்படும் !!!
பிரகாசக்கவி
20.07.14
இலவசம்
ஓ
உலக மகா
கசாப்புக்கடைக்காரர்களே...
உங்கள் கடைகள்
திறந்ததே இருக்கட்டும்
கொஞ்சம் என்னோடு வாருங்கள்
அங்கே தாளிட்டிருக்கும்
கொட்டாய்களையும்
தொழுவங்களையும்
கொஞ்சம் தகர்த்தெறிவோம்
அந்த
ஜீவன்கலேனும் கொஞ்சம்
நிம்மதியாய் சுவாசிக்கட்டும்
வெட்டி
வகுந்து
துண்டு போட
மாமிசமின்றிப் போகும் என்னும்
கவலை உங்களுக்கு
கடுகளவேனும்
வேண்டவே வேண்டாம்
ஏகாதிபத்திய வல்லரசுகளின்
வாசலுக்கு செல்லுங்கள்
அங்கே
பலஸ்தீன் பக்தாத் என்று நீளும்
அடக்குமுறைப் பரம்பலில்
இன்னும்
மூலை முடுக்குகள் எங்கும்
குண்டு போட்டு
கூறு போட்டு
குவித்திருக்கும் என்
உடன்பிறப்புகளின்
மாமிசம் மட்டும் அங்கே இலவசம்
Labels:
அரசியல்,
இனவாதம்,
துஸ்பிரயோகம்,
நிதர்சனம்,
பெரும்பான்மை,
மரணம்
Friday, 18 July 2014
மகுடி ஊதும் மஞ்சக்கழுதைகள்
பாம்பாட்டும் படலம்
சந்துபொந்தெல்லாம் கிறுக்கப்படுகிறது
புனைவுகளுக்கு
புள்ளி வைத்து
கோலம் போடவேண்டும் என்பதற்காக
மண்புழுக்களுக்கு
அனஹொண்டா என்றும்.
பட்டாம்பூச்சிகளுக்கு
பருந்து என்றும்.
புள்ளிமான்களுக்கு
புல்டோசர் என்றும்
இன்னும்
கொரில்லாக்கள் மட்டும்
இன்நாட்டின்
சிறந்த குடிமக்கள் என்றும்
கதாபாத்திரங்களுக்கு
கண்
மூக்கு
வாய் வைத்து
வாலும் வரையப்படுகின்றது!
கடுப்பெடுத்து
குறிவிறைத்த
மஞ்சக்கழுதைகள் மட்டும்.
பின்
பசியெடுத்து
மகுடி ஊதி அலைகின்றன
அங்கும் இங்கும்
மண்புழு தேடித்தேடி ...
- பிரகாசக்கவி -
17.07.2014
Saturday, 12 July 2014
திருட்டு சுகமும் அழுக்கு விந்தும்
முட்டைக் கோதுடைத்து
மூச்சுவிடும்
கோழிக் குஞ்சுகளாட்டம்
விதை கிழித்து
வேர் துளைத்து
தலையசைக்கின்றது
கழிவென்றெண்ணி
கைவீசிய
அழுகத்தக்காளி ஒன்று
தெருவோர
குப்பைமேட்டில்
தோட்டத்துச்
செடிகளைப்போலவே
இவைகளும்
பூத்தல்
காய்த்தலெனும்
கற்பு வரம்
கைவரப்பெற்றிருக்கின்றன
குப்பைவண்டி என்னும்
கழுகுகள்
கண் காணாதவரை
நோக்கும் கண்களின்
நோக்கங்களுக்கேற்றார்ப்போல்
தம் வாழ்வின் அபத்தங்களை
பறைசாற்றியபடி
பிரகாசக்கவி
12/06/2014
Wednesday, 9 July 2014
இடயன்கை மந்தைகளும் புடயன்வாய் கோழிக்குஞ்சுகளும்
குயவன் கையிலிருக்கும்
களி உருண்டையென
கொல்லன்கம்மாலையில்
கொழுத்த சம்மட்டியாய் அவர்கள்...
வலி தாங்குமோர்
பழுத்த இரும்பின்
மரத்த இதயமென நாங்கள்
செத்தும் சாகாமலும் !!!
இலங்கைத் தீவின்
இடர்பாடுகளுக்குள் ?
இஸ்ரேலின் இதயமில்லா பன்றிகள்
மனித
மலம் தின்பதே இவர்கள்
இறுதிக் கனவாய் இருக்கக்கூடும்.
அதனால் தானோ என்னவோ
பறந்து பறந்து
பாலஸ்தீனப் பாலகர்களின்
மண்டையோடு சேமிக்கின்றார்களோ?
இல்லை
சிலவேளை இவர்களின்
சாஸ்த்திர சம்பிரதாயங்களின்படி
கலிமா மொழிந்த
கல்புகளும்
ஹலாலாய் சுரந்த
குருதியும் ஹராம் என்று
கை காட்டப்பட்டிருக்குமோ?
ஆனால் ஒன்று
நாங்கள் எல்லாம்
வாழப் பிறந்தவர்கள் அல்லர்
வரலாற்றை ஆளப் பிறந்தவர்கள்.
ஆகையினால்
அவன் நாடினால்
நாளைய பக்கங்களில்
யானைப்படையை துவசம் செய்த
அபாபீல் பறவைகளை போல் நாங்களும் !!!
Labels:
கவிதை,
கொலை,
சமூகம்,
துஸ்பிரயோகம்,
நிதர்சனம்,
பெரும்பான்மை,
மதவாதம்
கொடுஞ்சொல்
அவர்கள் வாய்வழி பீச்சிய
கொடுஞ் சொற்களை எல்லாம்
மீன்களை போல்
வலை வீசிப் பிடித்தாயிற்று !
துடி துடிக்கும் அவைகளை
அருவாமனையில் வைத்தருத்து
புளி ஊற்றி
உப்பிட்டு
மிளகாய் பொடியில்
துவைத்தெடுத்து
கொதி எண்ணெய்யில்
பொரித்தெடுத்த
அதன் பிண்டங்களுக்கு
அறுசுவை என்னும் அரிதாரம் பூசி
அழகு அழகாய்
அலங்காரத் தட்டங்களில்
அள்ளி வைத்து
மீண்டும்
அவர்களுக்கே பரிமாறப்படுகிறது
என்னவோர் அற்புதம்
அவைகள் எல்லாம்
வெடுக்கடிப்பதாய் சொல்லி
வீரிட்டு
ஓடுகிறார்கள் அவர்கள்
- பிரகாசக்கவி -
09/07/14
Friday, 4 July 2014
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ... !
சிற்றெரும்பின்
சிறுபருக்கைத்
திருடன் நீ !
நாய் வாலை
உன் நரித்தனத்தால்
பூனைவால் என்கின்றாய்
வேப்பையிலும்
இலுப்பையிலும்
பேய் இருப்பதாய் சொல்லிச் சொல்லி
அரசமரக்காடுகளை வளர்க்கின்றாய்
குருவிகளையும் மைனாக்களையும்
நாடுகடத்த திட்டம் தீட்டும் நீ
காக்கை எச்சங்களை கையில் ஏந்தி
கூவும் குயில்களையல்லவா
குற்றம் சொல்கின்றாய் ?
-- பிரகாசக்கவி
07/05/2014
Thursday, 3 July 2014
பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டு

நீ
மதவாதக்
கதையெழுது !
துறவிகளை
கதா நாயகர்களாக்கு !!
பள்ளி உடை !!!
அரசமரம் நடு !!!
வீடு கொளுத்து !!!
வியாக்கியானம் பேசு !!!
புத்தனுக்கு
புதுப் புது சிலை வை !
எங்கள்
சங்கத் தமிழை
உந்தன்
கொச்சை மொழியால்
புண் ஆக்கு !
அதில்
சிந்திச் சிதறும்
செங் குருதியில்
உன் கழுத்துக்கு
சால்வை உண்டாக்கு !
வேட்டியும் சட்டையும்
வெள்ளையில் உடுத்தி
உன்னை நீயே
சாமாதனப்புறா என்று
பூசிமெழுகு
நெஞ்சு நிமிர்த்தி நட
ஏன் என்று
உன்னை கேட்க்கும்
ஐநாக்கும்
அவர் அனுப்பும்
மைனாக்கும்
நாம் எல்லோரும்
ஒருதாய் மக்கள் என்னும்
பூச்சாண்டிக் கதை எழுது
உன்
புண்ணாக்கு கதை எழுது !!!
பிரகாசக்கவி
02/07/2014
Wednesday, 2 July 2014
மதியிழந்த மந்திகள்
கூர்ப்படைந்த
குரங்குகள் கூட்டமொன்றில்
மதியிழந்த
மந்திகளை போல...
யுத்தம் கருக்கலைந்த
தேசமொன்றில்
இன்று !
பேரினவாதத்தின் ருசிதட்டிய
சில தெருநாய்கள்
தன் மதவாதமென்னும்
குறி நீட்டி அலைகின்றன
அங்கும் இங்கும்
சிறுபான்மையெனும்
சிசுக்கள் தேடி ...
மதியிழந்த
மந்திகளை போல...
யுத்தம் கருக்கலைந்த
தேசமொன்றில்
இன்று !
பேரினவாதத்தின் ருசிதட்டிய
சில தெருநாய்கள்
தன் மதவாதமென்னும்
குறி நீட்டி அலைகின்றன
அங்கும் இங்கும்
சிறுபான்மையெனும்
சிசுக்கள் தேடி ...
Tuesday, 1 July 2014
அரசியல் அப்பத்துண்டும் ஆயிரம் கழுகுகளும்
அதே ஊர் ..
அதே ஆலமரம் ..
காகங்கள்
குயில் வேஷமும்.
நரிகள்
நாய் வேஷமும் போட்டன.
மீண்டும்
பாட்டி வருவாள்
வடை சுடுவாள் என்று ...
ஆனால் அங்கே
ஒரே ஒரு கழுகு மட்டும்
பூனை வேஷம் போடலாயிற்று !
வடை சுட்டுச் சுட்டு
வயிறெரிந்து போனதால் ...
இம்முறை
ஆயா வந்தாள்
அப்பம் சுட்டாள் !
கழுகு வந்தது
கவ்விச்சென்றது ...
காகங்களும் நரிகளும்
கைசேதப்பட்டன !!!
-- பிரகாசக்கவி
16/05/2014
குருட்டு தேவதையின் இருட்டு நியாயங்கள்
முதலை விழுங்கிய
ஆடு ஒன்றின்
பிழுக்கை கிளறி
பகுப்பாய்வு நடக்கிறது
விழுங்கப்பட்டது
தெருநாயாகவோ
பாயும் புலியாகவோ
அல்லது
ஓடும் எலியாகவோ
இருக்கக்கூடும் என்னும்
ஊகமூட்டைகளும்
கிலோ கணக்கில்
அவிழ்த்து விடப்படுகிறது
நிறம்
இனம்
மதம் என்று
பற்பல தகவல்களும்
ஆட்டை இழந்தவன்
வாக்குமூலமாய்
பதியவும் படுகிறது
இறுதியாய்
தாகமெடுத்த
ஆடு குடித்து
குளம் வற்றி
முதலை
மூச்சு திணறி இறந்ததாய்
தீர்ப்பெழுதி
இடையன் கையில்
விலங்கும் மாட்டப்படுகிறது
ஆடு ஒன்றின்
பிழுக்கை கிளறி
பகுப்பாய்வு நடக்கிறது
விழுங்கப்பட்டது
தெருநாயாகவோ
பாயும் புலியாகவோ
அல்லது
ஓடும் எலியாகவோ
இருக்கக்கூடும் என்னும்
ஊகமூட்டைகளும்
கிலோ கணக்கில்
அவிழ்த்து விடப்படுகிறது
நிறம்
இனம்
மதம் என்று
பற்பல தகவல்களும்
ஆட்டை இழந்தவன்
வாக்குமூலமாய்
பதியவும் படுகிறது
இறுதியாய்
தாகமெடுத்த
ஆடு குடித்து
குளம் வற்றி
முதலை
மூச்சு திணறி இறந்ததாய்
தீர்ப்பெழுதி
இடையன் கையில்
விலங்கும் மாட்டப்படுகிறது
பிரகாசக்கவி
23/06/2014
Subscribe to:
Posts (Atom)



















