மித்திரனில் வெளிவந்துள்ள
எனது நேர்காணல் (31/08/2014)
நன்றி தினக்குரல் வார வெளியீடு
07/09/2014
தற்போது விற்பனையில்
வாழ்த்துரை
____________
நண்பர் பிரகாசக்கவி எம்.பீ அன்வர்
அவர்கள் தனது கவிதைத்
தொகுப்பான ” தடம்
தொலைத்த தடயங்கள் ” என்ற
புத்தகத்திற்கு வாழ்த்துரை ஒன்றைக்
எழுதித்தரும்படி
கேட்டிருந்தார்.
வாழ்த்துவதற்கு அவருடைய
கவிதைகளைப் படிக்கத்
தேவையில்லை.
எனினும், இணைத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
படித்திருந்தேன். அவைகள்
அனேகருக்கு ஆர்வத்தைதரக்கூடியது என்ற
எண்ணம் எனக்கிருந்தது.
அனைத்தையும் ஒரு
முறை படித்துவிட்டால்
அதை உறுதிசெய்துவிடலாம்
என்ற தோன்றியதும் கவிதைகளைப்
படிக்கத்தொடங்கினேன்.
மிகவும் எளிமையான
கவிதை அமைப்பு,
வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிடுவதைப்போன்ற
கவிதை சொல்லல். மரபின் இசைத்
தன்மை கூடிவருகிற வசனங்கள்.
வாசிக்கவும்,
நினைவில் பதிந்துவிடவுமான
ஒருவகை கவிதை சொல்லல்.
நமது மூதாதயரின் கவிதை
மனமும், கவிதைக்கான
சொல்லுதலும் இந்த
இசைத்தன்மையும், எளிமையும்
நிறைந்தவைதான். அதைத்தான்
நாம் நாட்டால் பாடல் என
இன்று அழைக்கிறோம். அதன்
தொடர்ச்சியை இன்று நிகழ்த்திக்காட்டினால்,
அனேகமாக இவருடைய கவிதைச்
செயல்போலவே
அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது.
நமது பாரம்பரிய அல்லது,
சாதாரண மக்களின்
கலைப்பங்களிப்பு,
கலை ஈடுபாடு இந்த
நாட்டார் தன்மையையே அதிகம்
அக்கறை கொண்டிருப்பதாகும்.
அவர்கள் தங்களின்
பாட்டையும்
பதையத்துக்களையும்
எளிமையாகவும்,
கிண்டலாகவும்,
சிறு கோபங்களாகவும்
வெளிப்படுத்தினார்கள். அதைத்
தொடர்வதாகவே இவருடைய
கவிதைச் செயல்
அமைந்திருக்கிறது.
ஜனரஞ்சகவெளி அல்லது சாதாரணமக்களின்
அறிதல் வெளி என அழைக்கப்படும்
சமூகவெளியில்
நேரடியானதும்,
எளிமையானதுமான
கதைகளே அதிகம்
கவனத்திற்குரியனவாக இருக்கும்.
உடனடியாக புரிந்துகொள்ளும்
வகையில் தங்களோடு உறவாடும்
கவிதைகளுக்கே அங்கே
இடமிருக்கும். கவிதையும், அதன்
தொழில்நுட்பங்களும், அவைகளின்
பல்வகை
ஆற்றல்களும்
அவர்களுக்கு அவசியமான ஒன்றாக
இருப்பதில்லை. கவிதைப்
பிரதிகளோடு
கிடந்து போராடவும், தலையைப்
பிய்த்து அதன்
அர்த்தத்தை கண்டுபிடிக்கவேண்டிய
அவசியம் அவர்களுக்கில்லை.
இப்படியான கடினமான ரிஸ்க்
எடுப்பதற்கு அவர்களுக்கு
அவகாசம் இருப்பதுமில்லை.
இப்படியான ஜனரஞ்சகவெளியில்
பயன்பாடு உள்ளதும்,
அவர்களை அதிகம்
ஆர்வமூட்டக்கூடியதும்,
உடனடியாக ஒரு சமூக
கோபத்தை அவர்களிடம் கொண்டு
சேர்ப்பதற்கும் மிகவும்
அவசியமானது இந்தவகை எளிமையான
கவிதைச் செயல்கள்தான்.
அதை இன்று மிக கவனமாகவும்,
ஆற்றலோடும்
செய்துகொண்டிருப்பவர்கள்
(புதியவர்கள்)
இருவர்தான்
ஒன்று பிரகாசக்கவி மற்றையது அஸ்மின்.
அவருடைய முயற்ச்சி மேலும்
தொடர வாழ்த்துகிறேன்.
எந்தவொரு சமூகவெளியிலும்,
எந்தவொரு மொழியிலும்
குறித்த
ஒருவகைப் பிரதிதான் கவிதை என
கொண்டாடப்பட வேண்டும்
என்பது வன்முறையான கருத்து.
அங்கே. பலவகையான
கவிதைமுறைகளும்,
கவிதை அமைப்புக்களும்
இருக்கும். அவைகளை
அவைகளின்
பயன்பாடு கருதி நிச்சயம்
ஏற்க்கவே வேண்டும்.
எல்லா வகையான கவிதை
முறைமைகளையும்
தனது மொழியில் இருப்பதற்கான
விமர்சன மற்றும் வாசகச் சூழலை
அமைக்கவே வேண்டும். அதுதான்
இலக்கிய
வெளிக்கு ஆரோக்கியமானது.
ஒருவகைத் தன்மை
கொண்ட பிரதிகள் மாத்திரம்தான்
கவிதை மற்றவைகள் கவிதை அல்ல.
அவை துாக்கிவீசப்பட
வேண்டியவை என
புறமொதுக்குவது பன்மைத்
தன்மையை முற்றிலும் மறுக்கும்
வன்முறையின் வடிவமாகும்.
இது இலக்கியத்தில்
வெளிப்பட்டு நிற்கும் வன்முறை.
அவைகளைக்
கடந்து அனைத்து வகை கவிதைச்
செயலும் நிலவக்கூடயதும்,
புறக்கணிப்பிற்குள்ளாகாததும
ஒரு இலக்கிய வெளியை நாம்
எப்போதும் ஆதரிப்போம்.
சாதாரணமக்களும் பங்கேற்கும்
வகையில் செயற்படும் இவருடைய
கவிதைச் செயல் மேலும்
தொடரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
மிக்க அன்புடன்
றியாஸ் குரானா
வாழ்த்துப்பா
பெருமதியாய் வாழ்க!
---'---'---'---'---'---
பிரகாசமாய் நற்கவிதைகள் ஐம்பத்தைந்து
பிரகாச கவி யாத்தளித்து – நமக்கு
பூதலத்து எல்லாப் பரப்பினையும் தொட்டு
படையலாய் தந்திருக்கும் பங்கினை யுன்னி…!
படைத்தவன் நோக்கம் தான் அறியாது
பாதை மாறித் திரியும் மனிதர்க்கு
பாங்கான நற்கவிகள் பலவுமுண்டு
படைப்பின் நோக்கம் தெளிவாயுண்டு!
பாங்காக பகட்டாக நாளும் வாழ்ந்தும்
பெரும்படுக்கை நிச்சயம் வருமேஎன
பாராதார்க்கு பாங்காக பிரகாசக் கவி
படைத்தளித்துள்ளாரே மரணக்கவி
படையலில் முதலாய்த் தான்கொண்டு!
போலிவேசந்தான் பூண்டு பாரில்
பகட்டாய் வாழ்வாரைச் சாடினார்பாரும்!
பெருமை யிலாததை மண்ணாங்கட்டியாய்
பாரில் நகைத்தார் நகைப்பெழும் வாழும்!
பெண்கள் படும்பாடு ஆடவர்க்கு
பெரும்ருசியாம் பாங்காய்ச் சொன்னார்
பெண்ணவளின் மாதவிடாய்தான்
பெரியவருக்கு தீண்டாமையோ என
பெரிய உபதேசத்தை பிரகாசக்கவி
பொரிபோல தந்துள பாங்கலாதி!
பிள்ளை வீட்டு தாழ்வரத்தில்
புன்னகைப் பூக்களோடு காய்ந்த
பாசமாய் வளர்த்த அப்பாவின்
பரிதவிப்பை அங்கலாய்ப்பை
படம்பிடித்துத் தந்தாரே பாரும்!
படிக்கப் படிக்க பல்சுவையூட்டும்
பாக்கள் பலவாம் பிரகாசக் கவியின்
படித்திதுதான் சமத்து எனச் சொல்லி
பட்டியலிட காணாது வாழ்த்துக்கவி!
பாரின் பரப்பினில் பலவும் வந்து
பாங்காய் அவனே பெரியான் எனவீற்றில்
பாகாய் கற்கண்டாய்க் கவிகள் உளவே
பெருமை யிலாது சாதித்துவத்தைசாடிய
பெருமைமிகு அன்வரைப் போற்றினேன்!
பிரகாசந்தான் கவிகளெலாம் உண்மை
பெயரிலும் கொண்டார் சீராய் அதனையே
பெருமை கொள்வோர் சீரியரிவரை
பெருமனதாய் வாழ்த்துவம் மேலும்தந்திட
பெருமதியே பெருங்கவியாய் வாழ்க!
-“கவித்தீபம்” இஸ்மாயில் எம். பைரூஸ்
(கலைமகன் பைரூஸ்)
தமிழாசிரியர்
(வளவாளர் இரண்டாம்மொழி கற்கைநெறி)
ஸலாஹியா சர்வதேச பாடசாலை,
வெலிகம.
01.01.2014
_________________________________________________________________
விமர்சனம்
“தடம் தொலைத்த தடயங்கள்” – பிரகாசக்கவி
************************** ***********************
இவர் ஒரு இளங்கவி என்றபோதும்
இவரது பார்வை... சமுதாய நோக்கு..
இவரை ஒரு முதுபெரும் கவி
என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது.
சமூகத்தின் மீது எல்லா இளைஞருக்கும்
இருக்கும் கோபம்.... வெறுப்பு....
இவருக்குள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே
தெரிகிறது.
போர் கிழித்த புண்கள் இன்னும் ஆறாமல்
போயிருக்கும் மண்ணில் முளைக்கும்
எந்தக் கவிஞனுக்கும் இத்தகைய கோபமும்
தன்மான இன உணர்வும் கிளர்ந்தெழுவதும்
தவிர்க்க முடியாததாகும்.
“காலநகர்வு காயங்களுக்குக் களிம்பு பூசும்”
என்ற பழமைவாதச் சிந்தனைகளை
இவரைப் போன்ற இளங்கவிகள்
இன்னும் நம்பத் தயாராகவில்லை!!
இவர் தொலைத்த தடயங்களை
நாமும் கொஞ்சம் தேடிப்பார்ப்போம்.
முதல் கவிதையில் வாழ்வின் நிலையாமையை
ஒரு சித்தரைப் போல சிந்திக்கின்றார்..
“அலை வந்து
உடைத்துச் செல்லும்
மணல் வீடாய் உன் மரணம்
அதில்
அழுகிப்போகும் மாம்பழம்
உன் உடல்
இதை உணர்ந்தால்
நீயும் மனிதன்..!
இந்த மண்ணில் புலிகளும்
இராணுவமும் படுகொலைகளை
அரங்கேற்றி இருக்கின்றன..
அவற்றிலொன்றை இங்கே பதிவு செய்கின்றார்.
மிகவும் உணவு பூர்வமாக...
நாட்கள் நகர்ந்தது...
வருடங்கள் தொலைந்தது..
மஞ்சுப் பலகையும்
மீசான் கட்டையும்
மண்ணோடு மண்ணாய்
மக்கிப் போனாலும்...!
எங்கள் ஆன்மாவின்
நாடித் துடிப்பில்
ஒலிக்கிறது உங்கள் நாமம்..!”
விலைவாசி பற்றிக் கூறவந்த கவிஞர்
ஒருவித சுவையோடும் கவித்துவத்தோடும்
வெளிப்படுத்துகின்றார் அருமையாக..
“சீறும் பாம்பாய்
சீறிப் பாய்கிறாள்
சில அடி தூரம்
தள்ளியே படுக்கச் சொல்லி
என் அன்பான வீட்டுக்காரி..
காரணம் கேட்டால்
கடுப்போடு சொல்கிறாள்
பொட்டிப்பால்மா
பொல்லாத விலையாம்..!”
“கொலைகாரனுக்கு!”
என்ற தலைப்பின்கீழ் ஒரு கவிதை...
எந்தக் கல்லிலும் ஈரத்தை பிழிந்தெடுக்கும்!
“பாலூட்டி வளர்த்து
பதறுகின்ற அவன்
பாச அன்னையைப்பார்!
........
விதவையாகி
வீரிட்டு அழும்
அவன் அன்பு
மனைவியையும் பார்..!
.........
முத்தாய் பெற்றெடுத்து
முத்தமொன்று கொடுக்க
நாதியற்றுக் கிடக்கும்
அவன் முதல்
வாரிசைப் பார்..!
.........
உனக்கும் புரியும்
வலியின் ரணம்!
இவர் தன்னையும் ஒருமுறை திரும்பிப்பார்த்து
நெஞ்சு நிமிர்த்திக் கொள்ளுகிறார்!!
“கல்லடி மண் ஈன்றெடுத்த
கருப்பு வைரமும் நான்
மீன்பாடும்
தேன் நாட்டின்
மீசைக்காரன் நான்!
காற்றோடு
கவி பாடும்
கவிக்கோவும் நான்!”
“ஆடு மேய்க்கும் ஓநாய்கள்” என்ற தலைப்பின் கீழ்
இந்தமண்ணின் தலைவிதி மீண்டும் மாறும்
என்பதையும் கூறாமல் கூறிச்செல்லுகிறார்.
“ஆனால் ஒன்று மட்டும் இதுவரை
ஓநாய்களுக்குப் புரியவில்லை.
புலிகள் பதுங்குவது ஒய்வெடுக்கவல்ல
பாய்வதற்கு என்று...!”
இந்த மண்ணில்
காணாமல் போனோரையும்
இந்தக் கவிஞர் தேடிப்பார்த்திருக்கிறார்!
“முழந்தாளிட்டு
கைகளிரண்டும் பின்னால்
கட்டப்பட்டிருக்கிறது.
ஆடைகளைக் காணவுமில்லை.
தலையில் துப்பாக்கிச்சூடுபட்டு
இறந்தவன் போலும்
மூளை முழுவதும்
வெளித்தள்ளிக் கிடக்கிறது.
.........
அவன் நெற்றியில்
பெரிதாய் எழுதப்பட்டிருக்கிறது
இவன்
காணாமல் போனவன் என்று..!”
இவ்வாறு...
சமகாலப் பதிவுகளாக இந்தத் தொகுப்பு
வெளிவந்திருக்கின்றது.
இந்த மண்ணின் மறைக்கப்பட்ட
மறுக்கப்பட்ட வரலாறுகள் பலவற்றை
இந்தக் கவிஞர் மூலம் வெளிக்கொண்டுவந்து
ஆவணப்படுத்த முடியும் என எண்ணுகிறேன்.
இந்தப்படைப்பு இவரை ஒரு கவிஞன் என்ற நிலைக்கு
உயர்த்திச் செல்வதோடு இவருக்குரிய பொறுப்புக்களையும்
உணர்த்தி நிற்கின்றது என்றால் அது மிகையன்று!
இவருக்கு வாழ்த்துக்கள் கூறி
பூக்கள் தூவுவதால் என்தமிழ்
பெருமை கொள்கிறது!!
************************** *
சிறீ சிறீஸ்கந்தராஜா
25/08/2014
**************************
இவர் ஒரு இளங்கவி என்றபோதும்
இவரது பார்வை... சமுதாய நோக்கு..
இவரை ஒரு முதுபெரும் கவி
என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது.
சமூகத்தின் மீது எல்லா இளைஞருக்கும்
இருக்கும் கோபம்.... வெறுப்பு....
இவருக்குள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே
தெரிகிறது.
போர் கிழித்த புண்கள் இன்னும் ஆறாமல்
போயிருக்கும் மண்ணில் முளைக்கும்
எந்தக் கவிஞனுக்கும் இத்தகைய கோபமும்
தன்மான இன உணர்வும் கிளர்ந்தெழுவதும்
தவிர்க்க முடியாததாகும்.
“காலநகர்வு காயங்களுக்குக் களிம்பு பூசும்”
என்ற பழமைவாதச் சிந்தனைகளை
இவரைப் போன்ற இளங்கவிகள்
இன்னும் நம்பத் தயாராகவில்லை!!
இவர் தொலைத்த தடயங்களை
நாமும் கொஞ்சம் தேடிப்பார்ப்போம்.
முதல் கவிதையில் வாழ்வின் நிலையாமையை
ஒரு சித்தரைப் போல சிந்திக்கின்றார்..
“அலை வந்து
உடைத்துச் செல்லும்
மணல் வீடாய் உன் மரணம்
அதில்
அழுகிப்போகும் மாம்பழம்
உன் உடல்
இதை உணர்ந்தால்
நீயும் மனிதன்..!
இந்த மண்ணில் புலிகளும்
இராணுவமும் படுகொலைகளை
அரங்கேற்றி இருக்கின்றன..
அவற்றிலொன்றை இங்கே பதிவு செய்கின்றார்.
மிகவும் உணவு பூர்வமாக...
நாட்கள் நகர்ந்தது...
வருடங்கள் தொலைந்தது..
மஞ்சுப் பலகையும்
மீசான் கட்டையும்
மண்ணோடு மண்ணாய்
மக்கிப் போனாலும்...!
எங்கள் ஆன்மாவின்
நாடித் துடிப்பில்
ஒலிக்கிறது உங்கள் நாமம்..!”
விலைவாசி பற்றிக் கூறவந்த கவிஞர்
ஒருவித சுவையோடும் கவித்துவத்தோடும்
வெளிப்படுத்துகின்றார் அருமையாக..
“சீறும் பாம்பாய்
சீறிப் பாய்கிறாள்
சில அடி தூரம்
தள்ளியே படுக்கச் சொல்லி
என் அன்பான வீட்டுக்காரி..
காரணம் கேட்டால்
கடுப்போடு சொல்கிறாள்
பொட்டிப்பால்மா
பொல்லாத விலையாம்..!”
“கொலைகாரனுக்கு!”
என்ற தலைப்பின்கீழ் ஒரு கவிதை...
எந்தக் கல்லிலும் ஈரத்தை பிழிந்தெடுக்கும்!
“பாலூட்டி வளர்த்து
பதறுகின்ற அவன்
பாச அன்னையைப்பார்!
........
விதவையாகி
வீரிட்டு அழும்
அவன் அன்பு
மனைவியையும் பார்..!
.........
முத்தாய் பெற்றெடுத்து
முத்தமொன்று கொடுக்க
நாதியற்றுக் கிடக்கும்
அவன் முதல்
வாரிசைப் பார்..!
.........
உனக்கும் புரியும்
வலியின் ரணம்!
இவர் தன்னையும் ஒருமுறை திரும்பிப்பார்த்து
நெஞ்சு நிமிர்த்திக் கொள்ளுகிறார்!!
“கல்லடி மண் ஈன்றெடுத்த
கருப்பு வைரமும் நான்
மீன்பாடும்
தேன் நாட்டின்
மீசைக்காரன் நான்!
காற்றோடு
கவி பாடும்
கவிக்கோவும் நான்!”
“ஆடு மேய்க்கும் ஓநாய்கள்” என்ற தலைப்பின் கீழ்
இந்தமண்ணின் தலைவிதி மீண்டும் மாறும்
என்பதையும் கூறாமல் கூறிச்செல்லுகிறார்.
“ஆனால் ஒன்று மட்டும் இதுவரை
ஓநாய்களுக்குப் புரியவில்லை.
புலிகள் பதுங்குவது ஒய்வெடுக்கவல்ல
பாய்வதற்கு என்று...!”
இந்த மண்ணில்
காணாமல் போனோரையும்
இந்தக் கவிஞர் தேடிப்பார்த்திருக்கிறார்!
“முழந்தாளிட்டு
கைகளிரண்டும் பின்னால்
கட்டப்பட்டிருக்கிறது.
ஆடைகளைக் காணவுமில்லை.
தலையில் துப்பாக்கிச்சூடுபட்டு
இறந்தவன் போலும்
மூளை முழுவதும்
வெளித்தள்ளிக் கிடக்கிறது.
.........
அவன் நெற்றியில்
பெரிதாய் எழுதப்பட்டிருக்கிறது
இவன்
காணாமல் போனவன் என்று..!”
இவ்வாறு...
சமகாலப் பதிவுகளாக இந்தத் தொகுப்பு
வெளிவந்திருக்கின்றது.
இந்த மண்ணின் மறைக்கப்பட்ட
மறுக்கப்பட்ட வரலாறுகள் பலவற்றை
இந்தக் கவிஞர் மூலம் வெளிக்கொண்டுவந்து
ஆவணப்படுத்த முடியும் என எண்ணுகிறேன்.
இந்தப்படைப்பு இவரை ஒரு கவிஞன் என்ற நிலைக்கு
உயர்த்திச் செல்வதோடு இவருக்குரிய பொறுப்புக்களையும்
உணர்த்தி நிற்கின்றது என்றால் அது மிகையன்று!
இவருக்கு வாழ்த்துக்கள் கூறி
பூக்கள் தூவுவதால் என்தமிழ்
பெருமை கொள்கிறது!!
**************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
25/08/2014
நன்றி காற்றுவெளி கலை இலக்கிய மின்னிதழ் 24/10/2014
___________________________________________________________________
விமர்சனம்
தடம் தொலைத்த தடயங்கள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக்
கவி எம்.பீ. அன்வர் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஓவியா பதிப்பகம், 17-16-5-A, கே.கே. நகர்,
வத்தலக்குண்டு–642 202. விலை:ரூ. 120
vathilaipraba@gmail.com பேச 9629652652
_________________________________________
ஓவியா பதிப்பகத்தின்
பெருமைமிகு வெளியீடாக
வந்துள்ளது. பதிப்பாளர், இனிய நண்பர்
வதிலை பிரபா விமர்சனத்திற்காக
அனுப்பி வைத்தார். நூலாசிரியர்
கவிஞர் பிரகாசக்கவி எம்.பீ. அன்வர்
அவர்களுக்கு வழங்கி உள்ள
பிரகாசக்கவி என்ற பட்டம்,
பொருத்தமாகவே உள்ளது.
ஒவ்வொரு பொருளிலும்
ஆழ்ந்து சிந்தித்து பிரகாசமாக
கவிதை வடித்துள்ளார். ‘தடம் தொலைத்த
தடயங்கள்’ நூலின் தலைப்பும்
வித்தியாசமாக உள்ளது. பாராட்டுக்கள்.
சென்னை வள்ளியம்மாள் மகளிர்
கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர்
ப. பானுமதி இவர் (ஆதிரா முல்லை)
என்ற புனைப்பெயரில் முகநூலில்
கவிதைகள் எழுதி வரும் கவிஞர்.
இவரது அணிந்துரை நூலிற்கு அழகுரையாக
உள்ளது.
இலங்கையில் வாழ்ந்து வரும்
இஸ்லாமியர் நூலாசிரியர்.
எனவே அவர் அங்கு பல சோக
நிகழ்வுகளை நேரடியாக பார்த்திட்ட
அனுபவம் இருக்கும். வறுமையை,
ஏழ்மையை கவிதையில் படம்
பிடித்து காட்டி உள்ளார்.
வாழ்க்கைக் கோலங்கள் !
இடைவேளையில்
எல்லோரும்
ஆப்பிள் ஆரஞ்சு என்று
வயிறு நிறைக்க
நானோ
தண்ணீரால் வயிறு நனைத்தேன்
எல்லோரும் சுற்றுலா செல்ல
என் கண்களோ
வகுப்பறைச் சுவற்றில் தொங்கும்
உலகப் படத்தில்
சுற்றுலா சென்றது.
ஏழை நான்
முயற்சியின் எல்லை வரை சென்று
கல்வியியல் கல்லூரியில் !
வறுமையோடு போராடி, கல்லுரியில்
பட்டம் பெற்று, பள்ளி ஆசிரியராகப்
பணியில் சேர்ந்ததை கவிதையாக
வடித்துள்ளார்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள்,கடின
உழைப்பின் காரணமாக நல்ல
வசதி வாய்ப்புடன் வாழ்ந்தாலும் மன
அமைதியோ, மனமகிழ்ச்சியோ அடைவது இல்லை.
சிந்தையின் ஒரு ஓரத்தில் பிறந்தமண்
பற்றிய சிந்தனை, வருத்தம்,
வேதனை இருந்து கொண்டே தான்
இருக்கும். இசையரசர்
இளையராஜா அவர்கள், ஒரு பாடலில்
பாடுவார், “சொர்க்கமே என்றாலும்,
அது நம்மூரைப் போல வருமா?” என்று.
எனக்கும் அப்படித்தான், சென்னை,
பெங்களூர் என்று நவீன
நகரங்களுக்கு சென்ற போதும் பிறந்த
ஊரான மதுரைக்கு ஈடாகாது.
மதுரைக்கு வந்த பிறகே மனம்
மகிழ்வு அடையும் .அந்த பிறந்த மண்
பற்று உணர்த்தும் கவிதை மிக நன்று.
இயற்றி விடு !
கூழோ கஞ்சியோ
குடிசையில் குடித்து
தாய் நாட்டில் நாங்கள் வாழ
சீதனச் சட்டம்
இயற்றுவது
இன்றைய கட்டாய தேவையாச்சு !
ஆற்று மணலை கொள்ளையடிக்கிறான் ,மலைகளை வெட்டி கொள்ளையடிக்கிறான் ,வனங்களை அழித்து கொள்ளையடிக்கிறான்,
நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கிறான். இயற்கையை மனிதன்
சேதப்படுத்தி மகிழ்கிறான்.
பொறுத்தது போதும்
என்று பொங்கி எழுந்து இயற்கை மனிதனை சிதைத்து வருகின்றது.
இயற்கையின் சீற்றம் தானே சுனாமி.
சுனாமி !
ஏய் கடலே
உன்னில்
இதுவரை
வள்ளங்கள்
மிதக்கக் கண்டோம்
பின்னர்
பிணங்களையும்
மிதக்கக் கண்டோம்
நீ கொடையரசியா
இல்லை
கொலைகாரியா
நீ அமையின் சின்னம்மா
இல்லை
அழுகையின் கிண்ணமா?.
அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள்
பிறந்த
நாளை அவர்களாகவே சுவரொட்டிகள்
அடித்து விளம்பரப்படுத்தி கொண்டாடி வருகின்றனர். சிலர் பிறந்தநாள் என்ற பெயரில் தொண்டர்களிடமிருந்து வசூல் வேட்டையும்
நடத்தி வருகின்றனர். இவற்றைக்கண்ட
நூலாசிரியர் வடித்த கவிதை.
பிரியும் நாள் !
பிரயோசனம் இன்றி
பிரிந்து போகும் நாளை
பிறந்த நாள் என்று
பிரம்மாண்டமான
கேக் வெட்டி
பிரியாவிடை வைக்கிறார்கள்
புண்ணாக்கு
மடையர்கள் இன்று
வயது ஒன்று
கூடி விட்டதால்
சிரிக்கும் மானிடனே
உன் ஆயுளும் குறைந்து விட்ட
உண்மைதனை
நீ அறிந்தால்
தொடருமா உன் சிரிப்பு?
நூலாசிரியர் இலங்கையில்
வாழ்ந்து வருபவர்,
இன்றைய நடப்பை,
உள்ளதை உள்ளபடி அப்படியே பதிவு செய்துள்ளார்.
பாருங்கள்.
தம்பட்டம்!
போர் முடிந்ததாய்
பெருமுழக்கம்
குதிரை குட்டியீன்ற
யானை முட்டை போல
ஆங்காங்கே தோரணங்கள்
அதன் நடுவில் காரணங்கள்
ஒடிந்து போன
ஓராயிரம் விதிகளுக்கு
ஓட்டு போட்டாயிற்று
தமிழர் கால் உடைத்து
குளிருக்கு குதூகலமாய்
சூப்பும் குடிச்சாச்சு
வாந்தி வருவதாய்
தேரைகள்
தேவாரம் பாடலாச்சு
ஆனால் இன்னும்
சுதந்திரம் வந்து போனதாய்
சுவடுகள் தானுமில்லை இங்கு!
இலங்கையில் அமைதி நிலவுவதாக
தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதாக
வெளி உலகிற்கு போலியாகவே பிரகடனம்
செய்து வருகின்றனர். ஆனால் இன்னும்
அங்கு தமிழர்கள்
அடிமைகளாகவே வாழ்கின்றனர் என்ற உண்மையை கவிதையில் பதிவு செய்த
நூலாசிரியர் கவிஞர் எம்.பீ. அன்வர்
அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சிங்கள இன உணர்வை தூண்டி விட்டு வன்முறைக்கு வித்திட்ட
புத்த பிட்சுக்கு நம் நாட்டில் அஞ்சல்
தலை வெளியிட்டு மகிழ்வது தமிழர்களின்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது .
உள்ளத்து உணர்வுகளை மிக நுட்பமாக
கவிதையாக்கி உள்ளார். கண்டதை,
உணர்ந்ததை, நடந்ததை,
நடப்பதை கவிதையாக்கி உள்ளார்.
இவரது கவிதைச் சுவடுகள்
அழியாதவை.
ஆடு மேய்க்கும் ஓநாய்கள்!
ஆடுகள் ஒருபோதும்
குரைப்பதில்லை நாய்களைப் போல
அதனால் தான்
இன்றும் சில ஓநாய்களால்
ஊளையிட்டுக் கொண்டே இருக்க
முடிகிறது
வல்லரசு எனும் வல்லூறுகளாய்
ஆனால் ஒன்று மட்டும் இது வரை
ஓநாய்களுக்குப் புரியவேயில்லை
புலிகள் பதுங்குவது ஓய்வெடுக்கவல்ல
பாய்வதற்கு என்று!
நவீன இன்றைய மனிதர்கள் வணிக
வளாகங்களுக்கு செல்லும்
போது அவர்களிடம் பேரம்
பேசுவதில்லை. ஆனால் அவர்கள்
நூற்றுக்கணக்கில் இலாபம்
வைத்து இருந்தாலும் கேட்ட
பணத்தை மறுப்பின்றி கொடுப்பார்கள்.
ஆனால் இல்லம்
வந்து தேடி வந்து விற்கும்
ஏழை வியாபாரிகளிடம் வாய் வலிக்க
பேரம் பேசும் நிலை உள்ளது.
அதனை ஒரு சிறுகதை போல எள்ளல்
சுவையுடன் நெறி போதிக்கும்
விதமாக கவிதை வடித்துள்ளார். மிக
நன்று.
வைத்தெரிச்சல் !
ஐநூறு ரூபாய் விற்ற மீன்களை
வாதாடி கூத்தாடி
இருநூறு ரூபாய்க்கு வாங்கிச்
சென்றதில்
பெருமிதம் அவனுக்கு
இவன் சாதனையை
அவன் மனைவி கூட
புகழ்ந்து
பேசுகிறாள்
அவளது தோழிகளிடம் .
பாவம் இவன்
தொண்டைக்குழியில்
தொக்கி நின்று
தொல்லை செய்த
மீன்முள்ளை துரத்திவிட
அவன்செய்த
கலவரங்களால்
திடீர்என்று அவன் வீடு ஓர்
குட்டிப் போர்க்களமாய் மாறிப் போனது
அப்போது தான் அங்கே
அவன் வீட்டுப் பூனையும்
எதிர்வீட்டுப்
பூனையும் பேசிக்கொள்கின்றன
மீன்காரன் வைத்தெரிச்சல்
சும்மா விடுமா என்று.
நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக்
கவி எம்.பீ. அன்வர் அவர்களுக்கும்,
ஓவியா பதிப்பாளர் இனிய நண்பர்
வதிலை பிரபா அவர்களுக்கும்
பாராட்டுக்கள் .i
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
_____________________________________________________________________________
விமர்சனம்
விஞரும் , எழுத்தாளருமான
நண்பர் முஸ்டீன் அவர்களின் பார்வையில்
எனது கவிதை தொகுப்பு பற்றிய விமர்சனம் இது
Sunday, November 2, 2014
___________________________________________________
நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக்
கவி எம்.பீ. அன்வர் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஓவியா பதிப்பகம், 17-16-5-A, கே.கே. நகர்,
வத்தலக்குண்டு–642 202. விலை:ரூ. 120
vathilaipraba@gmail.com பேச 9629652652
_________________________________________
ஓவியா பதிப்பகத்தின்
பெருமைமிகு வெளியீடாக
வந்துள்ளது. பதிப்பாளர், இனிய நண்பர்
வதிலை பிரபா விமர்சனத்திற்காக
அனுப்பி வைத்தார். நூலாசிரியர்
கவிஞர் பிரகாசக்கவி எம்.பீ. அன்வர்
அவர்களுக்கு வழங்கி உள்ள
பிரகாசக்கவி என்ற பட்டம்,
பொருத்தமாகவே உள்ளது.
ஒவ்வொரு பொருளிலும்
ஆழ்ந்து சிந்தித்து பிரகாசமாக
கவிதை வடித்துள்ளார். ‘தடம் தொலைத்த
தடயங்கள்’ நூலின் தலைப்பும்
வித்தியாசமாக உள்ளது. பாராட்டுக்கள்.
சென்னை வள்ளியம்மாள் மகளிர்
கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர்
ப. பானுமதி இவர் (ஆதிரா முல்லை)
என்ற புனைப்பெயரில் முகநூலில்
கவிதைகள் எழுதி வரும் கவிஞர்.
இவரது அணிந்துரை நூலிற்கு அழகுரையாக
உள்ளது.
இலங்கையில் வாழ்ந்து வரும்
இஸ்லாமியர் நூலாசிரியர்.
எனவே அவர் அங்கு பல சோக
நிகழ்வுகளை நேரடியாக பார்த்திட்ட
அனுபவம் இருக்கும். வறுமையை,
ஏழ்மையை கவிதையில் படம்
பிடித்து காட்டி உள்ளார்.
வாழ்க்கைக் கோலங்கள் !
இடைவேளையில்
எல்லோரும்
ஆப்பிள் ஆரஞ்சு என்று
வயிறு நிறைக்க
நானோ
தண்ணீரால் வயிறு நனைத்தேன்
எல்லோரும் சுற்றுலா செல்ல
என் கண்களோ
வகுப்பறைச் சுவற்றில் தொங்கும்
உலகப் படத்தில்
சுற்றுலா சென்றது.
ஏழை நான்
முயற்சியின் எல்லை வரை சென்று
கல்வியியல் கல்லூரியில் !
வறுமையோடு போராடி, கல்லுரியில்
பட்டம் பெற்று, பள்ளி ஆசிரியராகப்
பணியில் சேர்ந்ததை கவிதையாக
வடித்துள்ளார்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள்,கடின
உழைப்பின் காரணமாக நல்ல
வசதி வாய்ப்புடன் வாழ்ந்தாலும் மன
அமைதியோ, மனமகிழ்ச்சியோ அடைவது இல்லை.
சிந்தையின் ஒரு ஓரத்தில் பிறந்தமண்
பற்றிய சிந்தனை, வருத்தம்,
வேதனை இருந்து கொண்டே தான்
இருக்கும். இசையரசர்
இளையராஜா அவர்கள், ஒரு பாடலில்
பாடுவார், “சொர்க்கமே என்றாலும்,
அது நம்மூரைப் போல வருமா?” என்று.
எனக்கும் அப்படித்தான், சென்னை,
பெங்களூர் என்று நவீன
நகரங்களுக்கு சென்ற போதும் பிறந்த
ஊரான மதுரைக்கு ஈடாகாது.
மதுரைக்கு வந்த பிறகே மனம்
மகிழ்வு அடையும் .அந்த பிறந்த மண்
பற்று உணர்த்தும் கவிதை மிக நன்று.
இயற்றி விடு !
கூழோ கஞ்சியோ
குடிசையில் குடித்து
தாய் நாட்டில் நாங்கள் வாழ
சீதனச் சட்டம்
இயற்றுவது
இன்றைய கட்டாய தேவையாச்சு !
ஆற்று மணலை கொள்ளையடிக்கிறான் ,மலைகளை வெட்டி கொள்ளையடிக்கிறான் ,வனங்களை அழித்து கொள்ளையடிக்கிறான்,
நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கிறான். இயற்கையை மனிதன்
சேதப்படுத்தி மகிழ்கிறான்.
பொறுத்தது போதும்
என்று பொங்கி எழுந்து இயற்கை மனிதனை சிதைத்து வருகின்றது.
இயற்கையின் சீற்றம் தானே சுனாமி.
சுனாமி !
ஏய் கடலே
உன்னில்
இதுவரை
வள்ளங்கள்
மிதக்கக் கண்டோம்
பின்னர்
பிணங்களையும்
மிதக்கக் கண்டோம்
நீ கொடையரசியா
இல்லை
கொலைகாரியா
நீ அமையின் சின்னம்மா
இல்லை
அழுகையின் கிண்ணமா?.
அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள்
பிறந்த
நாளை அவர்களாகவே சுவரொட்டிகள்
அடித்து விளம்பரப்படுத்தி கொண்டாடி வருகின்றனர். சிலர் பிறந்தநாள் என்ற பெயரில் தொண்டர்களிடமிருந்து வசூல் வேட்டையும்
நடத்தி வருகின்றனர். இவற்றைக்கண்ட
நூலாசிரியர் வடித்த கவிதை.
பிரியும் நாள் !
பிரயோசனம் இன்றி
பிரிந்து போகும் நாளை
பிறந்த நாள் என்று
பிரம்மாண்டமான
கேக் வெட்டி
பிரியாவிடை வைக்கிறார்கள்
புண்ணாக்கு
மடையர்கள் இன்று
வயது ஒன்று
கூடி விட்டதால்
சிரிக்கும் மானிடனே
உன் ஆயுளும் குறைந்து விட்ட
உண்மைதனை
நீ அறிந்தால்
தொடருமா உன் சிரிப்பு?
நூலாசிரியர் இலங்கையில்
வாழ்ந்து வருபவர்,
இன்றைய நடப்பை,
உள்ளதை உள்ளபடி அப்படியே பதிவு செய்துள்ளார்.
பாருங்கள்.
தம்பட்டம்!
போர் முடிந்ததாய்
பெருமுழக்கம்
குதிரை குட்டியீன்ற
யானை முட்டை போல
ஆங்காங்கே தோரணங்கள்
அதன் நடுவில் காரணங்கள்
ஒடிந்து போன
ஓராயிரம் விதிகளுக்கு
ஓட்டு போட்டாயிற்று
தமிழர் கால் உடைத்து
குளிருக்கு குதூகலமாய்
சூப்பும் குடிச்சாச்சு
வாந்தி வருவதாய்
தேரைகள்
தேவாரம் பாடலாச்சு
ஆனால் இன்னும்
சுதந்திரம் வந்து போனதாய்
சுவடுகள் தானுமில்லை இங்கு!
இலங்கையில் அமைதி நிலவுவதாக
தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதாக
வெளி உலகிற்கு போலியாகவே பிரகடனம்
செய்து வருகின்றனர். ஆனால் இன்னும்
அங்கு தமிழர்கள்
அடிமைகளாகவே வாழ்கின்றனர் என்ற உண்மையை கவிதையில் பதிவு செய்த
நூலாசிரியர் கவிஞர் எம்.பீ. அன்வர்
அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சிங்கள இன உணர்வை தூண்டி விட்டு வன்முறைக்கு வித்திட்ட
புத்த பிட்சுக்கு நம் நாட்டில் அஞ்சல்
தலை வெளியிட்டு மகிழ்வது தமிழர்களின்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது .
உள்ளத்து உணர்வுகளை மிக நுட்பமாக
கவிதையாக்கி உள்ளார். கண்டதை,
உணர்ந்ததை, நடந்ததை,
நடப்பதை கவிதையாக்கி உள்ளார்.
இவரது கவிதைச் சுவடுகள்
அழியாதவை.
ஆடு மேய்க்கும் ஓநாய்கள்!
ஆடுகள் ஒருபோதும்
குரைப்பதில்லை நாய்களைப் போல
அதனால் தான்
இன்றும் சில ஓநாய்களால்
ஊளையிட்டுக் கொண்டே இருக்க
முடிகிறது
வல்லரசு எனும் வல்லூறுகளாய்
ஆனால் ஒன்று மட்டும் இது வரை
ஓநாய்களுக்குப் புரியவேயில்லை
புலிகள் பதுங்குவது ஓய்வெடுக்கவல்ல
பாய்வதற்கு என்று!
நவீன இன்றைய மனிதர்கள் வணிக
வளாகங்களுக்கு செல்லும்
போது அவர்களிடம் பேரம்
பேசுவதில்லை. ஆனால் அவர்கள்
நூற்றுக்கணக்கில் இலாபம்
வைத்து இருந்தாலும் கேட்ட
பணத்தை மறுப்பின்றி கொடுப்பார்கள்.
ஆனால் இல்லம்
வந்து தேடி வந்து விற்கும்
ஏழை வியாபாரிகளிடம் வாய் வலிக்க
பேரம் பேசும் நிலை உள்ளது.
அதனை ஒரு சிறுகதை போல எள்ளல்
சுவையுடன் நெறி போதிக்கும்
விதமாக கவிதை வடித்துள்ளார். மிக
நன்று.
வைத்தெரிச்சல் !
ஐநூறு ரூபாய் விற்ற மீன்களை
வாதாடி கூத்தாடி
இருநூறு ரூபாய்க்கு வாங்கிச்
சென்றதில்
பெருமிதம் அவனுக்கு
இவன் சாதனையை
அவன் மனைவி கூட
புகழ்ந்து
பேசுகிறாள்
அவளது தோழிகளிடம் .
பாவம் இவன்
தொண்டைக்குழியில்
தொக்கி நின்று
தொல்லை செய்த
மீன்முள்ளை துரத்திவிட
அவன்செய்த
கலவரங்களால்
திடீர்என்று அவன் வீடு ஓர்
குட்டிப் போர்க்களமாய் மாறிப் போனது
அப்போது தான் அங்கே
அவன் வீட்டுப் பூனையும்
எதிர்வீட்டுப்
பூனையும் பேசிக்கொள்கின்றன
மீன்காரன் வைத்தெரிச்சல்
சும்மா விடுமா என்று.
நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக்
கவி எம்.பீ. அன்வர் அவர்களுக்கும்,
ஓவியா பதிப்பாளர் இனிய நண்பர்
வதிலை பிரபா அவர்களுக்கும்
பாராட்டுக்கள் .i
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
_____________________________________________________________________________
விமர்சனம்
விஞரும் , எழுத்தாளருமான
நண்பர் முஸ்டீன் அவர்களின் பார்வையில்
எனது கவிதை தொகுப்பு பற்றிய விமர்சனம் இது
Sunday, November 2, 2014
___________________________________________________
தடம் தொலைத்த தடையங்கள்
கவிதை வரவுகள் அதிகம், சொல்ல நினைத்ததை மில இலகுவாகச் சொல்லிவிட்டு நிமிர சுலபமாக வசப்படும் ஊடகம் இதுதான் என்பதால் அதிகம் பேர் பயன்படுத்தும் வசதிமிக்கதாயிற்று. பிரகாசக் கவி எம்.பீ.அன்வரின் இந்தப் புத்தகத்தை எனக்குக் கிடைக்கச் செய்தவர் தம்பி தாஜ் அஸ்ரீ ஊடாக சகோதரர் மனாப் அவர்கள்தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தான் படிப்பதற்கு அவகாசம் கிடைத்தது. பொதுவாக அங்கொன்றும் இங்கொன்றமாகப் பகிரப்படும் இவரின் சில கவிதைகளையே ஏற்கனவே படிக்கக் கிடைத்தது. ஆயினும் முழுத் தொகுப்பாகப் பார்க்கும் போதுதான் ஒரே நிறுவையில் ஒருவரின் கனதி நமக்குமத் தென்படும்.
மிக நேர்த்தியான அச்சும் பார்க்கத் தூண்டும் பக்க வடிவமைப்பும் எழுத்துருக்களின் தேர்வும் அட்டைப்பட நிறமும் தெரிவுசெய்யப்பட்ட தாளும் அருமை. அந்த நேர்த்தியில் ஒரே மூச்சில் படித்து முடிப்பதே ஓர் இனிமையான அனுபவம்தான். அன்வருக்கு கவிதை எழுத வருகின்றது என்பதுதான் முக்கியமான விடயம், பெரிதும் மரணத்தைப் பற்றியும் நிலையாமை பற்றியும்தான் இவர் எழுதியிருக்கின்றார், தனக்கென ஓர் கவிதை வடிவத்தைத் தேர்வு செய்திருப்பதும், தான் சொல்ல வந்த விடயங்களைச் சொல்லி முடித்திருப்பதும் ஒரு வெற்றிதான்.
தேர்ந்த வாசிப்புதான் எழுத்தைச் செழுமைப்படுத்தும் என்பதை அன்வர் இன்னும் உறுதியாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். பன்முகத் தேடல் இருக்கும் உங்களுக்கு விடயதானங்களுக்கப் பஞ்சமில்லை ஆதலால் இன்னும் நீண்ட தூரம் பணயம் செய்யத்தக்க ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது என்பதே திருப்திகரமான செய்தி, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் ஆர்வத்தை விதைக்கும் வண்ணம் அமைவதுதான் கவிதையொன்றின் வெற்றியென்று நான் கருதுகின்றேன். அத்துடன் ஒரு தரமான கவிதை அப்படியே முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியோ மனதில் பதிந்து போகும் தன்மை இருப்பதாக நான் உணர்கின்றேன். அல்லது அதன் கருத்தாவது மனதில் தங்கி நிற்கும். எனது வாசிப்பனுவத்தில் நான் தெளிந்த உண்மை இது.
அற்புதம் அபாரம் ஆஹா ஓஹோவென்று பொய்யாகப் புகழ்ந்துரைக்க என்னால் ஒரு போதும் முடிவதில்லை, அத்தடன் ஒப்புக்காக ரெண்டு வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் செல்வதிலும்கூட உடன்பாடில்லை, எனது ரசனைக்கு என்ன படுகின்றதோ அதைச் சொல்லிவிடும் குணம் இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை, ஒரு புத்தகத்தை வெளியிடுவதன் பின்னால் மறைந்திருக்கும் உழைப்பையும் கஸ்டங்களை மிக இலகுவாக என்னாலும் உணர்ந்துகொள்ள முடியும், நாம் கஸ்டப்படுகின்றோம் என்பதற்காக பொன்குஞ்சென்று கொண்டாடும் தன்மையில் இருந்து விடுபட்டு ஒரு வாசகனாக நின்று திரும்பிப் பார்க்கும் போதுதான் எந்த இடத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். உங்கள் தொகுதியை ஒரு வாசகனாக நின்று ஒரு முறை படித்துப்பாருங்கள், அது இன்னும் உங்களைக் கூர்மைப்படுத்த நிச்சயம் உதவும்.
புதிய களங்களைக் கைவசம் நிறையவே கொண்டிருக்கும் உங்கள் பார்வை இன்னும் விசாலித்து இதைவிடவும் பன்மடங்கு சிறந்த மற்றுமோர் தொகுதியை எங்கள் வாசிப்புக்கு விருந்தாக்கி தமிழ் இலக்கிய உலகுக்கு பங்களிப்புச் செய்ய எனதுமனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பலரும் வாசித்துப் பயன் பெறட்டும் என்று உங்களின் தடம் தொலைத்த தடயங்களை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்கின்றேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் இருந்து வெளிவருகின்ற மகாகவி சஞ்சிகையில்
தலவாக்கலை த. ராஜ் சுகா எழுதிய ரசனைக்குறிப்பு
______________________________________________________
--------------------------------------------------------------------------------------------------------------------------
படிகள் சஞ்சிகையில் வசீம் அக்ரம் எழுதிய கருத்துப்பகிர்வு
_____________________________________________________________
கவிதை வரவுகள் அதிகம், சொல்ல நினைத்ததை மில இலகுவாகச் சொல்லிவிட்டு நிமிர சுலபமாக வசப்படும் ஊடகம் இதுதான் என்பதால் அதிகம் பேர் பயன்படுத்தும் வசதிமிக்கதாயிற்று. பிரகாசக் கவி எம்.பீ.அன்வரின் இந்தப் புத்தகத்தை எனக்குக் கிடைக்கச் செய்தவர் தம்பி தாஜ் அஸ்ரீ ஊடாக சகோதரர் மனாப் அவர்கள்தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தான் படிப்பதற்கு அவகாசம் கிடைத்தது. பொதுவாக அங்கொன்றும் இங்கொன்றமாகப் பகிரப்படும் இவரின் சில கவிதைகளையே ஏற்கனவே படிக்கக் கிடைத்தது. ஆயினும் முழுத் தொகுப்பாகப் பார்க்கும் போதுதான் ஒரே நிறுவையில் ஒருவரின் கனதி நமக்குமத் தென்படும்.
மிக நேர்த்தியான அச்சும் பார்க்கத் தூண்டும் பக்க வடிவமைப்பும் எழுத்துருக்களின் தேர்வும் அட்டைப்பட நிறமும் தெரிவுசெய்யப்பட்ட தாளும் அருமை. அந்த நேர்த்தியில் ஒரே மூச்சில் படித்து முடிப்பதே ஓர் இனிமையான அனுபவம்தான். அன்வருக்கு கவிதை எழுத வருகின்றது என்பதுதான் முக்கியமான விடயம், பெரிதும் மரணத்தைப் பற்றியும் நிலையாமை பற்றியும்தான் இவர் எழுதியிருக்கின்றார், தனக்கென ஓர் கவிதை வடிவத்தைத் தேர்வு செய்திருப்பதும், தான் சொல்ல வந்த விடயங்களைச் சொல்லி முடித்திருப்பதும் ஒரு வெற்றிதான்.
தேர்ந்த வாசிப்புதான் எழுத்தைச் செழுமைப்படுத்தும் என்பதை அன்வர் இன்னும் உறுதியாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். பன்முகத் தேடல் இருக்கும் உங்களுக்கு விடயதானங்களுக்கப் பஞ்சமில்லை ஆதலால் இன்னும் நீண்ட தூரம் பணயம் செய்யத்தக்க ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது என்பதே திருப்திகரமான செய்தி, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் ஆர்வத்தை விதைக்கும் வண்ணம் அமைவதுதான் கவிதையொன்றின் வெற்றியென்று நான் கருதுகின்றேன். அத்துடன் ஒரு தரமான கவிதை அப்படியே முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியோ மனதில் பதிந்து போகும் தன்மை இருப்பதாக நான் உணர்கின்றேன். அல்லது அதன் கருத்தாவது மனதில் தங்கி நிற்கும். எனது வாசிப்பனுவத்தில் நான் தெளிந்த உண்மை இது.
அற்புதம் அபாரம் ஆஹா ஓஹோவென்று பொய்யாகப் புகழ்ந்துரைக்க என்னால் ஒரு போதும் முடிவதில்லை, அத்தடன் ஒப்புக்காக ரெண்டு வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் செல்வதிலும்கூட உடன்பாடில்லை, எனது ரசனைக்கு என்ன படுகின்றதோ அதைச் சொல்லிவிடும் குணம் இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை, ஒரு புத்தகத்தை வெளியிடுவதன் பின்னால் மறைந்திருக்கும் உழைப்பையும் கஸ்டங்களை மிக இலகுவாக என்னாலும் உணர்ந்துகொள்ள முடியும், நாம் கஸ்டப்படுகின்றோம் என்பதற்காக பொன்குஞ்சென்று கொண்டாடும் தன்மையில் இருந்து விடுபட்டு ஒரு வாசகனாக நின்று திரும்பிப் பார்க்கும் போதுதான் எந்த இடத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். உங்கள் தொகுதியை ஒரு வாசகனாக நின்று ஒரு முறை படித்துப்பாருங்கள், அது இன்னும் உங்களைக் கூர்மைப்படுத்த நிச்சயம் உதவும்.
புதிய களங்களைக் கைவசம் நிறையவே கொண்டிருக்கும் உங்கள் பார்வை இன்னும் விசாலித்து இதைவிடவும் பன்மடங்கு சிறந்த மற்றுமோர் தொகுதியை எங்கள் வாசிப்புக்கு விருந்தாக்கி தமிழ் இலக்கிய உலகுக்கு பங்களிப்புச் செய்ய எனதுமனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பலரும் வாசித்துப் பயன் பெறட்டும் என்று உங்களின் தடம் தொலைத்த தடயங்களை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்கின்றேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் இருந்து வெளிவருகின்ற மகாகவி சஞ்சிகையில்
தலவாக்கலை த. ராஜ் சுகா எழுதிய ரசனைக்குறிப்பு
______________________________________________________
--------------------------------------------------------------------------------------------------------------------------
படிகள் சஞ்சிகையில் வசீம் அக்ரம் எழுதிய கருத்துப்பகிர்வு
_____________________________________________________________











No comments:
Post a Comment