Tuesday, 1 July 2014

குருட்டு தேவதையின் இருட்டு நியாயங்கள்




முதலை விழுங்கிய
ஆடு ஒன்றின்
பிழுக்கை கிளறி
பகுப்பாய்வு நடக்கிறது

விழுங்கப்பட்டது

தெருநாயாகவோ
பாயும் புலியாகவோ

அல்லது

ஓடும் எலியாகவோ
இருக்கக்கூடும் என்னும்
ஊகமூட்டைகளும்

கிலோ கணக்கில்
அவிழ்த்து விடப்படுகிறது

நிறம்
இனம்
மதம் என்று
பற்பல தகவல்களும்

ஆட்டை இழந்தவன்
வாக்குமூலமாய்
பதியவும் படுகிறது

இறுதியாய்

தாகமெடுத்த
ஆடு குடித்து

குளம் வற்றி

முதலை
மூச்சு திணறி இறந்ததாய்
தீர்ப்பெழுதி

இடையன் கையில்
விலங்கும் மாட்டப்படுகிறது



பிரகாசக்கவி

23/06/2014

No comments:

Post a Comment